News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
விஜய்க்கு எதிராக மகன் ஜேசன் சஞ்சய் அதிரடி முடிவு :

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து அரசியலிலும் செயல்பட்டு வரும் விஜயைச் சுற்றி சமீபமாக குடும்ப வாழ்க்கை குறித்த செய்திகள் பரவி வருகின்றன.

சமூக வலைதளங்களில் அவரது மனைவி சங்கீதா விஜய் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.

1999ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியினர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்ப வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

இலங்கைத் தமிழ் பின்னணியைச் சேர்ந்த சங்கீதாவுடன் நீண்டகால உறவை பகிர்ந்து வந்த நிலையில், தற்போது வெளிவரும் தகவல்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

விவாகரத்து மனு குடும்ப நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட தரப்பில் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.

இதற்கிடையில் மகன் ஜேசன் சஞ்சய் சமூக வலைதளத்தில் தந்தையை பின்தொடர்வதை நிறுத்தியதாக கூறப்படுவது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.



6

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad