News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
தமிழ்த் திரைப்படங்களில் கவனம் செலுத்தும் சுராஜ் :

மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு அடுத்தடுத்து தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

மலையாள சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகராக இருப்பவர் சுராஜ் வெஞ்சரமூடு.

தி கிரேட் இந்தியன் கிச்சன் மூலம் பரவலான கவனத்தைப் பெற்ற சுராஜ், வீர தீர சூரன் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றவர் தொடர்ந்து தமிழ்ப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது, யூத் திரைப்படத்தில் நடிகர் கென்னுக்கு தந்தையாகவும் தனுஷின் கர திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

மேலும், நடிகர் ரஜினிகாந்துடன் ஜெயிலர் - 2 திரைப்படத்திலும் சுராஜ் நடித்து வருகிறார்.

இதனால், மார்ச் வெளியீட்டில் யூத், ஏப்ரல் வெளியீடாக கர, ஜூலையில் ஜெயிலர் - 2 என சுராஜ் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.



3

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad