News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
பிரபல தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார். : திரையுலகில் சோகம்

பிரபல இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தக்காளி சீனிவாசன் உடல்நலக் குறைவால் காலமானார்.

அவர் பெங்களூரு நகரில் நேற்று உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரது மறைவு திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது இறுதிச் சடங்குகள் இன்று பெங்களூருவில் நடைபெற உள்ளன.

திரைப்பட தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் தக்காளி சீனிவாசன் பல படைப்புகளை வழங்கியுள்ளார்.

வருங்கால தூண்கள், மனசுக்குள் மத்தாப்பு, நாளைய மனிதன், அதிசய மனிதன் போன்ற திரைப்படங்களை அவர் தயாரித்துள்ளார்.

மேலும் ஜென்ம நட்சத்திரம், விட்னஸ், அசோகவனம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இதற்கிடையில் நடிகராகவும் அவர் சில படங்களில் தோன்றியுள்ளார்.

குறிப்பாக சூரசம்ஹாரம் திரைப்படத்தில் அவர் நடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தக்காளி சீனிவாசன் மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



7

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad