News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
‘தாய் கிழவி’ என் வாழ்க்கை​யில் பலரை ஞாபகப்படுத்​திய படம்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி :

சிவகு​மார் முரு​கேசன் இயக்​கி​யுள்ள படம், ‘தாய் கிழவி’.

பேஷன் ஸ்டூடியோஸ் மற்​றும் சிவ​கார்த்​தி​கேயன் புரொடக் ஷன்ஸ் இணைந்து தயாரித்த இப்​படத்​தில் 75 வயது மூதாட்​டி​யாக ராதிகா சரத்​கு​மார் நடித்​துள்​ளார்.

சிங்​கம்​புலி, அருள்​தாஸ், பால சரவணன், ரேய்ச்​சல் ரெபேகா, முத்​துக்​கு​மார், முனீஷ்​காந்த் உள்பட பலர் நடித்துள்ள இப்​படம் பிப்​.27-ல் வெளி​யாகி வரவேற்பைபெற்றது.

இந்​நிலை​யில் இதன் வெற்றி விழா சென்​னை​யில் நடந்​தது.

படக்​குழு​வினர் கலந்து கொண்​டனர்.

சிவ​கார்த்​தி​கேயன் பேசும்போது, “‘தாய் கிழ​வி’ படத்​தை, தங்​கள் குடும்​பத்​தைச் சேர்ந்த ஒரு​வருடைய கதை​யாக நினைத்து வெற்றி பெற வைத்த அனை​வருக்​கும் நன்​றி.

இந்​தப் படத்​தின் கதையை ஆரம்​பத்​தில் இயக்​குநர் சொல்லும்​போது நான் சிரித்து ரசித்தேன்.

ஆனால், இதில் எனக்கு டக்​கென்று பிடித்த காட்சி ஒன்று உண்​டு.

படத்​தில் பால சரவணன், ராதி​கா​விடம் கேட்​பார்.

‘வா​ரா​வாரம் மதுரைக்கு போனியே, என்​ன​தான் பண்ணுனே?” என்​று.

எனக்​கும் அவர் என்ன பண்ணியிருப்பார் என்று ஆர்​வ​மாக இருந்​தது.

‘அங்க போய் ஏதாவது பணம் சம்​பா​தித்து இருப்​பா​ரா, வேலை பார்த்​திருப்​பா​ரா? என்று யோசனை தோன்​றியது.

ஆனால், அவர் ஜாலி​யாக பொரிகடலை சாப்​பிட்​டு​விட்டு வரு​கிறார் என்​றதும் எனக்கு ஒரு மாதிரி​ ஆனது.

ஏனென்​றால் எல்​லோரும் ஓடிக்​கொண்டே இருக்​கிறோம்.

நமக்​கென்று வாழ்க்​கை​யில 5 நிமிட​மாவது செல​வழிக்​கிறோ​மா? என்று தோன்​றியது.

அந்த இடத்​திலேயே முடிவு பண்​ணி​விட்​டேன், இந்​தப் படத்தை தயாரித்தே ஆக வேண்டும் என்​று.

முதலில் நம்மை நாம் சந்​தோஷ​மாக வைத்​துக்​கொள்​வது​தான் முக்​கி​யம் என்று இந்​தப் படத்​தில் இயக்​குநர் சொல்லும்​போது, மகிழ்ச்​சி​யாக இருந்​தது.

அப்​போ​திருந்​து, நல்ல படம் பண்​ணப் போகிறோம் என்ற எண்​ணம் மட்டுமே இருந்​தது.

இது, என் வாழ்க்​கை​யில் பலரை ஞாபகப்படுத்​திய படம்.

ராதிகா மேடம் நடித்த பவுனுத்​தாய் கதா​பாத்​திரத்​தில், என் அம்மா தெரிந்​தார், என் அக்​கா, என் மனைவி ஆர்த்தி ஆகியோரை பார்த்​தேன்.

ஒவ்​வொரு வீட்​டிலும் இருக்​கிற அம்​மாக்​களுக் கும் அக்​காள்களுக்​கும் தங்கச்சிகளுக்குமான சமர்ப்​பண​மும் தான் இந்த தாய் கிழவி படமும் வெற்​றி​யும்” என்றார்.

மேடை​யில் எஸ்கே புரொடக் ஷன்ஸ் தயாரிக்​கும் 10- வது படத்​தின் இயக்​குநர் அம்​மா​முத்து சூர்யாவை அறி​முகப்​படுத்​தி​னார்​.



7

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad