News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
கொலம்பியாவில் 125 பேருடன் சென்ற ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது : 66 பேர் பலி :

கொலம்பியாவில் 125 பேருடன் சென்ற ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 66 பேர் உயிரிழந்தனர்.

கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள புட்டுமயோ மாகாணத்தில் இருந்து அந்நாட்டு ராணுவத்திற்கு சொந்தமான C-130 ஹெர்குலிஸ் ரக விமானத்தில் 116 வீரர்கள் உட்பட 125 பேர் புறப்பட்டு சென்றனர்.

விமானம் மேலே எழும்பிய சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

பெரு, ஈக்வெடார் எல்லையில் உள்ள Puerto என்ற பகுதியில் விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியது.

விமான விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், மீட்புப் படையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற மீட்புப் படையினர், 50க்கும் மேற்பட்டோரை மீட்ட நிலையில், 66 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஏராளமானோரை படுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பலர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, காட்டுப்பகுதியில் விழுந்த விமானம், கொழுந்துவிட்டு எரிந்ததால் பல அடி உயரத்திற்கு கரும்புகை எழுந்தது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

விபத்திற்கான காரணம் உடனே தெரியாத நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.

விரைவில் இதுகுறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.கொலம்பியா விமானப்படையின் சமீபகால வரலாற்றில் நிகழ்ந்த மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக இந்த சி-130 ஹெர்குலஸ் விமான விபத்து நிகழ்ந்துள்ளது.



3

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad