News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது :

ஆறுமுகநேரி மற்றும் காயல்பட்டினம் பகுதிகளில் விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.10லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக இருவரை கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் மாட்டுக்குளம் பகுதியில் உள்ள ஒரு கடையில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், உதவி ஆய்வாளர் இருதயராஜ் மற்றும் தலைமை காவலர் ஜெயகாந்தன் ஆகியோர் சோதனை நடத்தினர்.

இதில், கடையின் உரிமையாளர் பீார் முஹம்மது (37) என்பவர் விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்த 3.750 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட பீார் முஹம்மது அளித்த தகவலின் அடிப்படையில், ஆறுமுகனேரி அருகே உள்ள ராணிமகாராஜபுரத்தைச் சேர்ந்த பாலகணேஷ் (36) என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, ஆய்வாளர் திலீபன் தலைமையிலான காவல்துறையினர் ஆறுமுகனேரி சோதனைச் சாவடியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் 12 கிலோ புகையிலைப் பொருட்களுடன் வந்த பாலகணேஷைப் பிடித்து விசாரித்ததில், அவர் மற்றொரு இடத்தில் ரகசியமாகப் பதுக்கி வைத்திருந்த 33 மூட்டைகள் கண்டறியப்பட்டன.

அவரிடமிருந்து மொத்தம் 34 மூட்டைகளில் இருந்த 400 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்சார இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.

10 லட்சம் ஆகும்.

இது தொடர்பாகத் திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் மற்றும் ஆய்வாளர் திலீபன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, பீார் முஹம்மது மற்றும் பாலகணேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



3

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad