News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
கழுகுமலையில் பைக் மீது லாரி மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு :

கழுகுமலையில் பைக் மீது சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் மதுரையைச் சேர்ந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள எஸ்.

பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் பெருமாள் (52), இவர் நேற்று இரவு தனது ராயல் என்பீல்டு பைக்கில் கோவில்பட்டி - கழுகுமலை சாலையில் சென்று கொண்டிருந்தார்.

கெச்சிலாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, கழுகுமலை சாலையில் சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராத விதமாகப் பெருமாள் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பெருமாள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த பெருமாளின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் தென்காசி மாவட்டம், கீழ நவிதா நல்லூர் பகுதியைச் சேர்ந்த சண்முகையா மகன் ராசு (46), என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.



3

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad