News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
நாசரேத் கனோன் தாமஸ் சித்தர் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் :

திருமறையூர் கனோன் தாமஸ் சித்தர் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

நாசரேத் திருமறையூரில் அமைந்துள்ள கனோன் தாமஸ் சித்தர் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ.பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இவ்விழாவிற்குத் திருமறையூர் சேகர குருவானவர் ஜான் சாமுவேல் ஜெபம் செய்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

சிறப்புப் பள்ளியின் தாளாளர் டேவின் சாலமோன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை சார்பில் இந்தச் சிறப்பு நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.  கல்லூரி மாணவர்கள், சிறப்புப் பள்ளி மாணவர்களுடன் இணைந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

மேலும், மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ.

பொறியியல் கல்லூரி தாளாளர் மாமல்லன், கல்லூரி முதல்வர் ஜெயக்குமார், மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்புத் துறைத் தலைவி ஆக்னஸ் பிரேமா மேரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும், துறைப் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக பள்ளி முதல்வர் மெற்றில்டா நன்றி கூறினார்.



3

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad