News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
விடுமுறைக்கு வந்த ராணுவ வீரர் கார் விபத்தில் பலி : மனைவி குழந்தைகள் காயம் :

கயத்தாறு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சுவர் மீது மோதிய விபத்தில் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது மனைவி மற்றும் குழந்தைகள் காயங்களுடன் உயிர் தப்பினர்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள திருமங்கலகுறிச்சியைச் சேர்ந்தவர் முருகன்.

இவரது மகன் சுடலைமணி (34).

இவர் ராணுவத்தில் பணியாற்றி வந்த நிலையில், தற்போது விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

சுடலைமணி தனது மனைவி பிரியா (29), மகன் அமித் (6) மற்றும் 2½ வயது மகள் மனிஷா ஆகியோருடன் சென்னையில் உள்ள தனது மாமனார் வீட்டுக்குக் காரில் புறப்பட்டார்.

இந்தக் காரைச் சுடலைமணியின் மாமனார் பாண்டி என்பவர் ஓட்டினார்.

மதுரை - திருச்சி நான்கு வழிச்சாலையில் கொட்டாம்பட்டி அருகே அய்யாபட்டி விலக்கு பகுதியில் கார் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்தது.

அதிவேகமாகச் சென்ற கார் சாலையோரக் கடை ஒன்றின் சுவர் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராணுவ வீரர் சுடலைமணி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

காரை ஓட்டிய பாண்டி, அவரது மகள் பிரியா மற்றும் இரண்டு குழந்தைகள் என நான்கு பேரும் காயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த கொட்டாம்பட்டி போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

உயிரிழந்த சுடலைமணியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

விடுமுறைக்காக ஊருக்கு வந்த ராணுவ வீரர் விபத்தில் பலியான சம்பவம், அவரது சொந்த ஊரான திருமங்கலகுறிச்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



3

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad