News & Ad contact: 75025 54555
தூத்துக்குடியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி:
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கடற்கரைச் சாலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
"வாக்கு எனும் உரிமையைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலமே சிறந்த ஜனநாயகம் அமையும்" என்ற கருத்தை முன்னிறுத்தி, இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் "ஓட்டுப் போட்டு வழியைக் காட்டு” என்ற மையக்கருத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி, ஜே.சி.ஐ பியல் சிட்டி குயீன் பீஸ் மற்றும் புனித மரியன்னை கல்லூரி 'உன்னத் பாரத் அபியான்' திட்டத்தினர் இணைந்து கடற்கரைச் சாலையில் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
திரேஸ்புரம் பகுதியிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணியைத் தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையர் வெங்கட்ராமன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பேரணியில் பங்கேற்ற புனித மரியன்னை கல்லூரி மாணவிகள், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
பேரணி, கடற்கரைச் சாலை வழியாகச் சென்று முத்துநகர் கடற்கரையில் நிறைவடைந்தது.
அங்கு நடைபெற்ற கூட்டத்தில், காமராஜ் கல்லூரிப் பேராசிரியர் தேவராஜ் மற்றும் ஜே.சி.ஐ நிர்வாகிகள், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், ஜனநாயகக் கடமையைத் தவறாமல் ஆற்ற வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் உரையாற்றினர்.
5
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-