News & Ad contact: 75025 54555
புவி அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட் :
இந்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புவி அறிவியல் மையத்தில் காலியாக உள்ள சயின்டிஸ்ட் ‘பி’ மற்றும் ‘டி’ பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்: 1.
சயின்டிஸ்ட் ‘பி’: 2 இடங்கள் (பொது).
வயது: 35க்குள்.
தகுதி: ஜியாலஜி பிரிவில் 60% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் தேர்ச்சி.
2.
சயின்டிஸ்ட் ‘பி’: 1 இடம் (ஒபிசி) வயது: 38க்குள்.
தகுதி: புவி இயற்பியல் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் தேர்ச்சி.
3.
சயின்டிஸ்ட் ‘டி’: 1 இடம் (பொது).
வயது: 50க்குள்.
தகுதி: ஜியாலஜி/மரைன் ஜியாலஜி பிரிவில் 60% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு 7வது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியுடன் பிளனேட்டரி ஜியாலஜி/மைனராலஜி/பெட்ரோலஜி/செயிஸ்மோலாஜிக்கல் சயின்ஸ் ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் பி.ஹெச்டி படித்தவர்கள் அல்லது படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படும்.
எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
https://www.ncess.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.03.2026.
2
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-