News & Ad: 75025 54555
தங்கம்:
13270
வெள்ளி:
240

ஜேஇஇ பிரதான தேர்வுக்கு மே 2 வரை விண்ணப்பிக்கலாம் :

24 Apr, 2026 — 12:56 PM
ஜேஇஇ பிரதான தேர்வுக்கு மே 2 வரை விண்ணப்பிக்கலாம் :

மே 17ம் தேதி நடை​பெறும் ஜேஇஇ பிரதான தேர்​வுக்​கான விண்​ணப்ப பதிவு இன்று தொடங்​கு​கிறது.

ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்​திய உயர்​கல்வி நிறு​வனங்​களில் இளநிலைப் படிப்​பு​களில் சேர, ஒருங்​கிணைந்த நுழைவுத் தேர்​வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்​டும்.

இது முதன்​மைத் தேர்​வு, பிர​தானத் தேர்வு என 2 கட்​ட​மாக நடத்​தப்​படு​கிறது.

2026ம் ஆண்​டுக்​கான முதன்​மைத் தேர்வு ஜனவரி, ஏப்​ரல் மாதங்​களில் நடத்தி முடிக்​கப்​பட்​டன.

இதில் வெற்றி பெற்ற மாணவர்​களுக்​கான பிர​தானத் தேர்வு மே 17ம் தேதி நடத்​தப்பட உள்​ளது.

இதற்​கான இணை​யதள விண்​ணப்ப பதிவு நேற்று (ஏப்​.23) தொடங்​கியது.

தகு​தி​யான மாணவர்​கள் https://jeeadv.ac.in இணை​யதளம் வாயி​லாக மே 2ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும்.

இந்த ஆண்​டில் இத்​தேர்வை ரூர்க்கி ஐஐடி நடத்​துகிறது.

காலை, மதி​யம் என 2 தாள்​களாக தேர்வு நடை​பெறும்.

12

கருத்துக்கள்