News & Ad: 75025 54555
தங்கம்:
13270
வெள்ளி:
240

TANUVAS-ல் Milk Recorder வேலை : மாதம் Rs.20,000 சம்பளம்

05 May, 2026 — 01:34 PM
TANUVAS-ல் Milk Recorder வேலை : மாதம் Rs.20,000 சம்பளம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) சார்பில், ஈரோடு மாவட்டம் பர்கூரில் அமைந்துள்ள Bargur Cattle Research Station-இல் “Milk Recorder” பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்கு மாதம் ரூ.20,000 சம்பளம் வழங்கப்படும்.

Any Degree மற்றும் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்ற, 21 முதல் 40 வயதுக்குள் உள்ள ஆண் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பிற்கு தகுதியானவர்கள்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும் இந்த வேலைக்கு, தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 18 மே 2026 அன்று நேரடியாக (Walk-in) கலந்து கொள்ளலாம்.

பதவி: Milk Recorder (ஆண்கள் மட்டும்) சம்பளம்: மாதம் Rs.20,000/- காலியிடங்கள்: 01 கல்வி தகுதி: Any Degree + இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம் வயது வரம்பு: 01.05.2026 நிலவரப்படி 21 முதல் 40 வயது வரை விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை முன்னுரிமை: அந்தியூர், பர்கூர் மலை, கடம்பூர் மலை மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முன்னுரிமை பெறுவர்.

மிருகங்களை கையாளும் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வு + நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், 18.05.2026 அன்று காலை 11:30 மணிக்கு Bargur Cattle Research Station, பர்கூரில் நடைபெறும் எழுத்துத் தேர்விலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் நேர்காணலிலும் நேரடியாக (Walk-in) பங்கேற்கலாம்.

நேர்காணல் தேதி: 18.05.2026 நேரம்: காலை 11:30 மணி நேர்காணல் நடைபெறும் இடம்: Bargur Cattle Research Station (BCRS), பர்கூர், ஈரோடு மாவட்டம்.

மேலும் தகவலுக்கு தொடர்பு எண்கள்: Dr.R.Subash, – 9442794107 Dr.C.Velladurai – 9843209058

7

கருத்துக்கள்