மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் , நாடு முழுவதும் காலியாக உள்ள 6,565 டெக்னீஷியன் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரயில்வே துறையில் அரசு வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள 6,565 பணியிடங்கள் இரண்டு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நிரப்பப்பட உள்ளன.
டெக்னீஷியன் கிரேடு-I சிக்னல் (Grade I Signal): 323 பணியிடங்கள்.
டெக்னீஷியன் கிரேடு-III (Grade III): 6,242 பணியிடங்கள் என மொத்த காலியிடங்கள்: 6,565 டெக்னீஷியன் கிரேடு-III பணிக்கு விண்ணப்பதாரர்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், சம்பந்தப்பட்ட வர்த்தகப் பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்ட NCVT / SCVT நிறுவனத்தில் ITI முடித்திருக்க வேண்டும் அல்லது 'அப்ரண்டிஸ்' பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
டெக்னீஷியன் கிரேடு-I சிக்னல் பதவிக்கு அறிவியல் பிரிவில் பி.எஸ்சி அல்லது பொறியியல் துறையில் டிப்ளமோ / பி.இ (B.E / B.Tech) போன்ற தகுதிகளைக் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கிரேடு-I சிக்னல் பதவிக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கிரேடு-III பிரிவிற்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிகளின்படி ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
டெக்னீஷியன் கிரேடு-1: ஆரம்ப ஊதியம் ரூ.29,200 (Pay Level 5) மற்றும் இதர படிகள்.
டெக்னீஷியன் கிரேடு-3: ஆரம்ப ஊதியம் ரூ.19,900 (Pay Level 2) மற்றும் இதர படிகள்.
விண்ணப்பபதிவு ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும்.
விரிவான அறிவிப்பு வெளியாகும் நாள்: ஜூன் 29, 2026 ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: ஜூன் 30, 2026 விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூலை 29, 2026 (இரவு 11:59 மணி வரை) தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான rrbapply.gov.in என்ற முகவரியின் வாயிலாக ஜூன் 30 முதல் ஜூலை 29 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கருத்துக்கள்