இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய குவாட் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.
ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, ஜப்பானின் டோஷிமிட்சு மொட்டேகி மற்றும் ஆஸ்திரேலியாவின் பென்னி வோங் ஆகியோர் பங்கேற்றனர்.
கடந்த 2024 செப்டம்ரில் இருந்து நடக்கும் 3வது சந்திப்பு கூட்டம் இது.
கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய அமைச்சர் ஜெய்சங்கர், இந்தோ-பசிபிக் பிராந்தியம் உலகளாவிய வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஊக்கமளிப்பதாக தொடர வேண்டும் என்றும் குவாட் அமைப்பானது கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பிராந்தியத்தில் பொருளாதார வாய்ப்புகளை ஊக்குவிப்பதற்கும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கருத்துக்கள்