News & Ad: 75025 54555
தங்கம்:
13270
வெள்ளி:
240

செஸ் வீராங்கனை வைஷாலிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி... அமைச்சர் ஆதவ் அர்ஜுனா :

27 May, 2026 — 03:34 PM
செஸ் வீராங்கனை வைஷாலிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி... அமைச்சர் ஆதவ் அர்ஜுனா :

சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு உலகளாவிய சாதனைகளைப் படைத்து, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து வரும் இளம் செஸ் வீராங்கனை வைஷாலிக்கு தற்பொழுது பாராட்டுகளும் நிதியுதவிகளும் குவிந்து வருகின்றன.

கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று அசத்தியுள்ள இவரின் ஆட்டத்திறனை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகளும் அலைஅலையாக வந்து சேர்கின்றன.  இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலியின் சர்வதேசப் பயணங்கள் மற்றும் பயிற்சிகளுக்கு உதவும் வகையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் நிதியுதவியை   வழங்கியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் வீராங்கனை வைஷாலியை நேரில் அழைத்து, இந்த ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவரிடம் வழங்கித் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.  அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கிய இந்த நிதியுதவிக்கு வீராங்கனை வைஷாலி மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களின் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

7

கருத்துக்கள்