நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ஊக்கத்தொகை ரூ.50 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் விஜய் வழங்கினார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,“தமிழக முதல்வர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில், நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று, வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தாவுக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உயரிய ஊக்கத் தொகையான 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
அப்போது, கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா நார்வே செஸ் 2026 தொடரில் வெற்றி பெற்றதற்காக வழங்கப்பட்ட கோப்பையைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
கருத்துக்கள்