News & Ad: 75025 54555
தங்கம்:
13270
வெள்ளி:
240

நரம்புகளில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த :

08 Jun, 2026 — 03:28 PM
நரம்புகளில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த :

ஆப்பிள் சிடர் வினிகர் (Apple Cider Vinegar): நரம்புகளில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

வினிகரை தண்ணீரில் கலந்து, நரம்பு சுருட்டல் உள்ள இடங்களில் கீழிருந்து மேல் நோக்கி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.

விளக்கெண்ணெய் மசாஜ்: சிறிதளவு விளக்கெண்ணெயை (Castor oil) லேசாகச் சூடாக்கி, பாதிக்கப்பட்ட காலில் கீழிருந்து மேல்நோக்கி மென்மையாகத் தடவி மசாஜ் செய்யவும்.

இது நரம்புகளில் உள்ள அழுத்தத்தைக் குறைத்து, ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.

மூலிகை பற்று: மஞ்சள், கருந்துளசி, வசம்பு மற்றும் கற்றாழை ஆகியவற்றைச் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.

இதனை நரம்பு சுருட்டல் உள்ள இடங்களில் பற்று போல போட்டு வர, வீக்கம் மற்றும் வலி குறையும்.நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி: தினமும் தவறாமல் காலை மற்றும் மாலை வேளையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது கால்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

தரையில் படுத்துக்கொண்டு கால்களை காற்றில் மிதிப்பது போன்ற பயிற்சிகள் (Cycling) நரம்புகளுக்கு நல்ல பலனைத் தரும்.

7

கருத்துக்கள்