News & Ad: 75025 54555
தங்கம்:
13270
வெள்ளி:
240

இந்திய ரயில்வேயில் மெகா வேலைவாய்ப்பு : 11,127 அசிஸ்டெண்ட் லோகோ பைலட் பணியிடங்கள் :

11 Jun, 2026 — 09:10 AM
இந்திய ரயில்வேயில் மெகா வேலைவாய்ப்பு : 11,127 அசிஸ்டெண்ட் லோகோ பைலட் பணியிடங்கள் :

இந்திய ரயில்வேயில் மெகா வேலைவாய்ப்பு: 11,127 அசிஸ்டெண்ட் லோகோ பைலட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு! (Assistant Loco Pilot Jobs 2026): இந்திய ரயில்வேயில் வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு வந்துள்ளது.

அசிஸ்டெண்ட் லோகோ பைலட் (ALP) பணியிடங்களை நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மொத்தம் 11,127 காலியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளன.

கல்வி மற்றும் வயதுத் தகுதி: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பத்தாம் வகுப்பு (10th) தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ (ITI) படித்திருக்க வேண்டும்.

அல்லது பொறியியல் துறையில் டிப்ளமோ (Diploma in Engineering) அல்லது இளங்கலை பட்டப்படிப்பு (Bachelor’s Degree in Engineering) முடித்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

விண்ணப்பதாரர்கள் 01.07.2026 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 30 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஓ.பி.சி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி (SC) மற்றும் எஸ்.டி (ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் மற்றும் தேர்வு முறை: தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு ஆரம்பக்கட்ட அடிப்படைச் சம்பளமாக மாதம் ரூ.19,900 வழங்கப்படும்.

இதனுடன் இதர ரயில்வே படிகளும் உண்டு.

விண்ணப்பதாரர்கள் மொத்தம் மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

முதலில் முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam), அதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வு (Main Exam) மற்றும் இறுதியாக கணினி வழி ஆப்டிடியூட் டெஸ்ட் (Computer Based Aptitude Test) ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தரம் பிரிக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை: பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.

500 ஆகும்.

எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணச் சலுகையாக ரூ.

250 மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் RRB-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.rrbchennai.gov.in/ என்ற முகவரிக்குச் சென்று ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 14.06.2026.

12

கருத்துக்கள்