News & Ad: 75025 54555
தங்கம்:
13270
வெள்ளி:
240

நகைச்சுவை நடிகர் சதீஷின் தந்தை காலமானார் :

21 Jul, 2026 — 11:49 AM
நகைச்சுவை நடிகர் சதீஷின் தந்தை காலமானார் :

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் சதீஷின் தந்தை காலமான சம்பவம் திரையுலகினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தையின் மறைவைத் தொடர்ந்து அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பெற்ற தந்தையை இழந்து வாடும் நடிகர் சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்குப் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே அரசியல் பிரபலங்களும் நேரில் சென்று சதீஷின் தந்தைக்குத் தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகியான வினோஜ், நேரில் சென்று அஞ்சலி செலுத்திய புகைப்படங்களைத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்து இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.

6

கருத்துக்கள்