News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம் :

மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஈரானின் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கெராஷ் பகுதியில், செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) நிலப்பகுதியில் இருந்து 10 கி.மீ.

ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

ஏற்கெனவே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானின் மீது தாக்குதல் நடத்தி வருவதால் இந்த நிலநடுக்கம் அங்கு மேலும் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.

கடந்த சனிக்கிழமை ஈரானின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து வான்வழித் தாக்குதல் நடத்தின.

இந்தத் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

இதையடுத்து, பழிதீர்க்கும் விதமாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவத் தளங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரான் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.



4

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad