News & Ad contact: 75025 54555
எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு வாங்கும் இடைவெளி 25 நாட்களாக உயர்வு :
அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை சமாளிக்கும் வகையில் ஒன்றிய அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டர் ஒன்றை வாங்கிய பிறகு அடுத்த சிலிண்டரை பெறுவதற்கான கால இடைவெளி 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
சிலிண்டர்களை அதிக அளவில் வாங்கி பதுக்கி வைத்து கள்ளச் சந்தையில் விற்பதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
சில பகுதிகளில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பதுக்கல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை கட்டுப்படுத்தவும், விநியோகத்தை சீராக வைத்திருக்கவும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் உள்நாட்டு தேவையை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு உற்பத்தியை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலும் சிலிண்டர் கையிருப்பு மற்றும் தேவை குறித்து தகவல் அளிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
5
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-