News & Ad contact: 75025 54555
ஹார்முஸ் முனையில் சிக்கிய இந்திய கப்பல் கேப்டன் உயிரிழப்பு :
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த 47 வயதான ராகேஷ் ரஞ்சன், கடந்த 26 ஆண்டுகளாக வணிகக் கப்பல் படையில் ஒரு திறமையான அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.
கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி 'ஏ.எஸ்.பி.
அவானா' என்ற தனியார் நிறுவனக் கப்பலில் கேப்டனாகப் பொறுப்பேற்ற அவர், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பலை வெளியேற்றும் சவாலான பணியில் ஈடுபட்டிருந்தார்.
ஆனால், கடந்த மாதம் 26-ஆம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் வெடித்தது அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.
ஹார்முஸ் நீரினைப் பகுதியில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியதால், சர்வதேசக் கப்பல் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது.
இதன் விளைவாக, கேப்டன் ரஞ்சன் சிங் மற்றும் 35 பணியாளர்கள் பயணித்த அந்தக் கப்பல், துபாய் கடற்கரையிலிருந்து சுமார் 60 கி.மீ.
தொலைவில் நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது.
போரின் உக்கிரம் குறையாததால், கடந்த 20 நாட்களாக அந்தக் கப்பல் அங்கேயே முடங்கிக் கிடந்தது.
தனது குடும்பத்தைப் பிரிந்து, சுற்றிலும் போர் மேகங்கள் சூழ்ந்த நிலையில், நடுக்கடலில் அடுத்தடுத்த நகர்வுகள் இன்றித் தவித்தது ரஞ்சன் சிங்கிற்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தியது.
கடலில் நீண்ட நாட்கள் முடங்கிக் கிடந்ததும், எதிர்காலம் குறித்த பயமும் அவரது உடல்நிலையை மெல்ல மெல்லப் பாதித்தது.
கடந்த 18-ஆம் தேதி ரஞ்சன் சிங்கின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தீவிர மன அழுத்தம் மற்றும் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்ட அவர், உரிய மருத்துவ உதவி கிடைக்காத நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
26 ஆண்டுகாலக் கடல் பயண அனுபவம் கொண்ட ஒரு மாலுமி, போர்ச் சூழலால் ஏற்பட்ட நெருக்கடியில் சிக்கி உயிரிழந்தது அவரது குடும்பத்தினரையும், ராஞ்சி மக்களையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
உயிரிழந்த கேப்டனுக்கு மனைவியும், பிரவார் (20) மற்றும் ஓம் (16) ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.
போர் முனையில் சிக்கியுள்ள மற்ற இந்தியப் பணியாளர்களைப் பத்திரமாக மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-