News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
அறுவை சிகிச்சையில்லை : லேசரும் இல்லை :புற்றுநோய் செல்களைச் சிதைக்கும் 'ஹிஸ்டோட்ரிப்சி' :

விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனித குலத்திற்கும் குறிப்பாக மருத்துவ உலகிற்கு பெரும் வரபிரசாதமாக நல்ல செய்தியை அறிவித்திருக்கிறது.

மருத்துவ உலகில் மாபெரும் புரட்சியாக, புற்றுநோய் கல்லீரல் கட்டிகளை அறுவை சிகிச்சை இல்லாமல், லேசர் கதிரியக்கம் ஏதும் பயன்படுத்தப்படாமல் 'அதிர்வு ஒலி அலைகள்' மூலம் கரைக்கும் 'ஹிஸ்டோட்ரிப்சி' (Histotripsy) எனப்படும் புதிய தொழில்நுட்பம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

பாரம்பரியமாகப் புற்றுநோய் கட்டிகளை அகற்ற அறுவை சிகிச்சை, கீமோதெரபி அல்லது கதிரியக்கச் சிகிச்சைகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், எந்தவித ஊசி அல்லது கதிரியக்கமும் இன்றி கட்டிகளை அழிக்கும் இந்த முறை நோயாளிகளிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த 'ஹிஸ்டோட்ரிப்சி' முறையில், உடலுக்கு வெளியே இருந்து அதிகத் திறன் கொண்ட ஒலி அலைகள் துல்லியமாகக் கட்டியின் மீது செலுத்தப்படுகின்றன.

இவை கட்டியின் செல்கள் மற்றும் திசுக்களுக்குள் நுண் குமிழ்களை உருவாக்கி, அவற்றை மிக வேகமாக வெடிக்கச் செய்கின்றன.

இந்த நுண் குமிழ்களின் அதிர்வால் புற்றுநோய் செல்கள் முழுமையாகச் சிதைந்து திரவமாக மாறுகின்றன.

பின்னர், அந்தத் திரவத்தைச் சிதைந்த தேவையற்ற செல்கள் என நம் உடலே இயற்கையாக அகற்றிவிடுகிறது.

அமெரிக்காவின் எஃப்.டி.ஏ (FDA) அங்கீகாரம் பெற்றுள்ள இந்தத் தொழில்நுட்பம், தற்போது உலகெங்கிலும் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் அறிமுகமாகி வருகிறது.

இந்தச் சிகிச்சை முறையின் மிக முக்கியச் சிறப்பம்சம் என்னவென்றால், இது அருகில் உள்ள ரத்த நாளங்கள் அல்லது பித்த நாளங்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல், மிகத் துல்லியமாகக் கட்டிகளை மட்டுமே குறிவைத்து அழிக்கிறது.

இதனால் நோயாளிகளுக்கு ரத்தப்போக்கு அல்லது பக்கவிளைவுகள் ஏற்படுவதில்லை.

பாரம்பரிய அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு குணமடைய நீண்ட காலம் தேவைப்படும் நிலையில், இந்த நவீன முறையின் மூலம் நோயாளிகள் மிக விரைவாகத் தங்களது அன்றாடப் பணிகளுக்குத் திரும்ப முடியும்.

புற்றுநோய்க்கு எதிரான போரில் 'ஹிஸ்டோட்ரிப்சி' ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.



2

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad