News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
தவெக விழாவில் விஜய் பாட்டுக்கு டான்ஸ் ஆடிய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் :

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் தின விழாவில், நடிகர் விஜய்யின் பாடலுக்கு நடனமாடிய அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியை மீது கல்வித் துறை ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பின்னையூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (58).

இவர் சங்கரநாதர்குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.

மேலும், வெள்ளத்தேவன் விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் பொறுப்புத் தலைமை ஆசிரியராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரத்தநாட்டில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மகளிர் தின விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற கிருஷ்ணவேணி, உற்சாக மிகுதியில் மேடையில் ஒலித்த விஜய்யின் ஹிட் பாடலுக்குத் தாளம் தப்பாமல் நடனமாடினார்.

தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி மேடையில் நடனமாடியதை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இந்த வீடியோ ‘X’ மற்றும் வாட்ஸ்-அப் தளங்களில் வைரலானது.

அரசு ஊழியராகப் பணியில் இருந்து கொண்டு, ஒரு அரசியல் கட்சியின் மேடையில் ஏறி நடனமாடியது அரசுப் பணியாளர் நடத்தை விதிகளுக்கு எதிரானது எனக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்துத் தகவல் அறிந்த பட்டுக்கோட்டை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகன், தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணியைப் பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

ஓய்வு பெற இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ள நிலையில், ஆசிரியை ஒருவர் அரசியல் மேடையில் நடனமாடியதற்காகச் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது கல்வித் துறை வட்டாரத்திலும், தவெக தொண்டர்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.



1

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad