News & Ad: 75025 54555
தங்கம்:
13270
வெள்ளி:
240

“நம்​மைப் பிடிக்​காதவர்​களுக்கு என்ன செய்தாலும் பிடிக்​காது” - ‘தர்மன்​’ பூஜை​யில் ரஜினி​காந்த் பேச்சு :

25 Jun, 2026 — 03:05 PM
“நம்​மைப் பிடிக்​காதவர்​களுக்கு என்ன செய்தாலும் பிடிக்​காது” - ‘தர்மன்​’ பூஜை​யில் ரஜினி​காந்த் பேச்சு :

நடிகர் ரஜினி​ காந்​தின் 173-வது படத்தை கமல் ​ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்​டர்​நேஷனல் தயாரிக்​கிறது.

ஆர்​.மகேந்​திரன் இணை தயாரிப்பு செய்​கிறார்.

இப்​படத்தை முதலில் சுந்​தர்.சி இயக்​கு​வ​தாக இருந்​தது.

கதை பிரச்​சினை காரண​மாக அவர் விலகியதை அடுத்​து, சிபி சக்​கர​வர்த்தி இயக்​கு​வ​தாக அறிவிக்கப்பட்​டது.

அவரும் வில​கியதை அடுத்து ‘ஓ மை கடவுளே’, ‘டி​ராகன்’ படங்களை இயக்​கிய அஸ்​வத் மாரி​முத்து இயக்​கு​வ​தாகச் செய்திகள் வெளி​யாகின.

இந்​நிலை​யில் அது உறுதிப்படுத்தப்பட்டுள்​ளது.

இப்​படத்​துக்கு ‘தர்​மன்’ என பெயரிடப்பட்​டுள்​ளது.

இதில் சிம்​ரன், ராஷி கன்னா ஆகியோர் நடிக்​கின்​றனர்.

அனிருத் இசையமைக்​கிறார்.

இப்​படத்​தின் தொடக்க விழா சென்​னை​யில் நடை​பெற்​றது.

விழா​வில் நடிகர் ரஜினி​காந்த் பேசி​ய​தாவது: பேச அழைப்​ப​தாகச் சொன்​னாலே தயக்​க​மாக இருக்​கிறது.

ஏனென்​றால் நான் பேசினாலே ‘பி​ராப்​ளம்​’​தான்.

எனக்​கும் பிரச்​சினை, மற்றவர்களுக்கும் பிரச்​சினை.

ஏதாவது கிளப்​பிக் கொண்டே இருப்​பார்​கள்.

நான் சும்மா இருந்​தால் இவர் என்ன பேசவே மாட்டேங்​கிறார் என்​பார்​கள்.

வாயில் கொழுக்​கட்டை வைத்​திருக்கிறா​ரா ? என கிண்​டல் செய்​வார்​கள்.

சரி என்று பேசி​னால், ‘இப்​போது வந்து பேசு’ என்று சிலரும், ‘இவர் பேசி​யிருக்​கக் கூடாது’ என்று சிலரும் சொல்​கிறார்​கள்.

ரொம்ப நாள் கழித்து நான் தெரிந்​து​கொண்​டது நம்​மைப் பிடிக்காதவர்​களுக்கு நாம் என்ன செய்​தா​லும் என்ன பேசி​னாலும் பிடிக்​காது.

பிடித்​தவர்​களுக்கு நாம் என்ன செய்​தா​லும் பேசினாலும் பிடிக்​கும் என நினைப்​பது முட்​டாள்​தனம்.

ஜாக்கிரதை​யாக இருக்க வேண்​டும்.

‘சி​வாஜி’ படத்​துக்கு பிறகு ராஜ் கமல் நிறு​வனத்​துக்கு நான் ஒரு படம் செய்​வ​தாக இருந்​தது.

அது தள்​ளிப்​போனது.

இப்​போது சேர்ந்​துள்​ளோம்.

இந்​தப் படத்​துக்கு அஸ்​வத் மாரி​முத்து 4-வது இயக்​குநர்.

முதலில் கே.எஸ்​.ரவி​கு​மார் இயக்​கு​வ​தாக இருந்​தது.

பின் சுந்​தர்.

சி வந்தார்.

அவருக்கு வேறு படங்​கள் இருந்​த​தால் தாமத​மானது.

சிபி சக்​கர​வர்த்​தி​யின் கதை அரு​மை​யாக இருந்​தது.

கொஞ்​சம் சென்சிட்​டிவ்.

அந்​தக் கதைக்கு நிறைய நாள் தேவைப்​படும் என்பதால் பிறகு செய்து கொள்​ளலாம் என்று முடி​வெடுத்​தோம்.

அப்​போது ​தான் அஸ்​வத் மாரி​முத்து உள்ளே வந்​தார்.

‘ரஜினி நான் கதை கேட்க மாட்​டேன்.

எல்​லாத்​தை​யும் உங்​களிடமே விட்​டு​விட்டேன்’ என்று கமல் கூறி​விட்​டார்.

எனக்கு டென்​ஷ​னாகி​விட்​டது.

எல்லா பொறுப்​பை​யும் என்​னிடம் கொடுத்​து​விட்​டார்.

ஆனால் நான் தான் அவரை கட்​டாயப்​படுத்தி இந்​தக் கதையைக் கேட்க வைத்​தேன்.

அஸ்​வத் மாரி​முத்துக்கு பெரிய பொறுப்பு இருக்​கிறது.

இந்​தப் படம் நன்​றாக வரும்.

எனக்​கும் கமலுக்​கும் இருக்​கிற நட்பை எவ்​வளவு சொன்​னாலும் அது குறை​வாகத்​தான் இருக்​கும்.

என் சினிமா கேரியரில் ‘இளமை ஊஞ்​சலாடு​கிறது’ வெற்​றியைத் தந்த படம்.

அதில் முதலில் நான் நடிப்​ப​தாகவே இல்​லை.

அதில் நடிக்க இருந்​தது ஜெய்​ கணேஷ் தான்.

கமல் தான் இதில் ரஜினி நடித்​தால் நன்​றாக இருக்​கும் என்று இயக்​குநரிடம் பரிந்​துரை செய்​தார்.

கமலால் தான் ‘இளமை ஊஞ்​சலாடு​கிறது’ படத்​தில் நடிக்​கும் வாய்ப்பே கிடைத்​தது.

இதுபோல கமல் எனக்​குச் செய்த உதவி​களைச் சொல்​லிக் கொண்டே போகலாம்.

இவ்​வாறு ரஜினி​காந்த் கூறி​னார்.

பின்னர் முதல்வர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறவில்லையே என்று கேட்டதற்கு அவரிடம் தெரிவித்து விட்டேன் என்றார்.

4

கருத்துக்கள்