கோவில்பட்டி கே.ஆர்.
கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மத்திய நூலகம் மற்றும் நாட்டுநலப் பணித்திட்ட அணி எண்: 132 இணைந்து பி.என்.
பணிக்கர் தேசிய வாசிப்பு / டிஜிட்டல் வாசிப்பு தினம் – 2026 நிகழ்ச்சியை கல்லூரியின் மத்திய நூலகத்தில் நடத்தினர்.
அறிவிற்கான வாசிப்பு எதிர்காலத்திற்கான டிஜிட்டல் வாசிப்பு என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சித்தார்த்தன், உதவிப் பேராசிரியர், ஆங்கிலத் துறை, கலந்து கொண்டு, பி.என்.
பணிக்கரின் வாசிப்பு இயக்கத்தின் வரலாறு, புத்தக வாசிப்பின் அவசியம், டிஜிட்டல் யுகத்தில் தரமான வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்வதன் முக்கியத்துவம், அறிவு வளர்ச்சியில் நூலகங்களின் பங்கு மற்றும் மாணவர்களின் தனிமனித மேம்பாட்டில் வாசிப்பின் பங்களிப்பு குறித்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்போம் – அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.
கருத்துக்கள்