ஆறுமுகநேரி சாகுபுரத்தில், நாளை (25 ஆம் தேதி) இலவச செயற்கை கால் மற்றும் உறுப்புக்கான அளவெடுக்கும் முகாம் நடக்கிறது.
சாகுபுரம் டி.சி.டபிள்யூ., நிறுவனத்துடன், சென்னை எஸ்.சி.அகர்வால் அறக்கட்டளை இணைந்து செயற்கை கால் மற்றும் முடநீக்கு உபகரணங்கள் அளவெடுக்கும் முகாமை நாளை (25 ஆம் தேதி) ஏற்பாடு செய்துள்ளது.
இந்த முகாம், நாளை காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடக்கிறது.
இதில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், ஏரல் பகுதியை சேர்ந்த பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும், பயனாளிகள் முகாம் பொறுப்பாளர்களான சம்பத் (9345112838) ஆகியோரை தொடர்பு கொண்டு விபரங்கள் தெரிந்து கொள்ளலாம் .
கருத்துக்கள்