News & Ad: 75025 54555
தங்கம்:
13270
வெள்ளி:
240

தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாணவிகள் கருப்பு உடை அணிந்து போராட்டம் :

24 Jul, 2026 — 06:48 PM
தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாணவிகள் கருப்பு உடை அணிந்து போராட்டம் :

டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாணவிகள் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தூத்துக்குடியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில மாணவிகள் கருப்பு உடை அணிந்து கல்லூரி வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலான மாணவிகள் கருப்பு நிற உடை அணிந்து வந்து தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

கல்லூரி வளாகத்திற்குள் ஒன்றுதிரண்ட 2,000-க்கும் மேற்பட்ட மாணவிகள், மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும், அவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உடனடியாக உறுதி செய்ய வலியுறுத்தியும் தீவிரமாக முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வாசகங்கள் மற்றும் மாணவர் உரிமைகளை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.

1

கருத்துக்கள்