News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
மத்திய கிழக்கு நாடுகளுக்கான 444 விமான சேவைகள் இன்று ரத்து: விமான போக்குவரத்துத் துறை அறிவிப்பு :

மத்திய கிழக்கு நாடுகளுக்கான 444 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

நேற்று 410 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று 444 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான்வெளியை மூடின.

ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இன்று பிற்பகல் வரை மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவை ரத்தாகி உள்ளது.

துபாய், அபுதாபி, ஷார்ஜா, தோகா, மஸ்கட், பஹ்ரைனுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் விமான சேவை முடங்கியுள்ளதால் ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்துள்ளனர்.

உலகிலேயே பரபரப்பாக காணப்படும் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முதல் பயணிகள் தவித்துள்ளனர்.

சவுதி செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டதால் டெல்லியில் 14 மணி நேரம் பயணிகள் தவித்து வருகின்றனர்.

ஈரான் உச்ச தலைவர் கமெனி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பதற்றம் அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் கமெனி குடும்பமே கொல்லப்பட்டுள்ள நிலையில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலின்போது டெஹ்ரானில் உள்ள தனது அலுவலகத்தில் கமெனி இருந்துள்ளார் என்று ஈரான் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதலில் கமெனி உயிரிழந்திருக்கக் கூடும் என ஈரான் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அவருடைய மரணத்திற்கு 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

7 நாட்கள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.



3

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad