News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
பாலக்காடு - திருச்செந்தூர் ரயில் சேவையில் மாற்றம்: இன்று முதல் மாற்றுப்பாதையில் இயக்கம் :

விருதுநகர் இரயில்வே யார்டு பகுதியில் நடைபெறும் பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக, பாலக்காடு - திருச்செந்தூர் இடையேயான இரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.

விருதுநகர் இரயில்வே யார்டு பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை 10:50 மணி முதல் மாலை 4:50 மணி வரை அவசரப் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் செல்லும் பல்வேறு இரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, பாலக்காடு சந்திப்பில் இருந்து திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் இரயில், இன்று வழக்கமான பாதைக்கு மாற்றாக மதுரை சந்திப்பு, மானாமதுரை மற்றும் விருதுநகர் வழியாக இயக்கப்படும்.

இந்த மாற்றுப்பாதை இயக்கத்தின் போது திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் ஆகிய இரயில் நிலையங்களுக்கு இந்த இரயில் செல்லாது.

அதற்குப் பதிலாக, மதுரை கிழக்கு மற்றும் மானாமதுரை ஆகிய இரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் இந்தச் சேவை மாற்றத்தைக் கவனித்துத் தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு இரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.



6

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad