News & Ad contact: 75025 54555
ஒன்றிய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு :
ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தின் கீழ் சென்னையில் இயங்கும் ஒன்றிய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஜூனியர் ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்: 1.
ஜூனியர் ஸ்டேனோகிராபர்: 1 இடம்.
வயது: 27க்குள்.
சம்பளம்: ரூ.19,900- ரூ.63,200.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்து எழுதும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
2.
ஜூனியர் செக்ரடேரியட் அசிஸ்டென்ட்: i) ஜெனரல்: 2 இடங்கள் ii) எஸ் அண்ட் பி: 3 இடங்கள் iii) எப் அண்ட் ஏ: மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.19,900- ரூ.63,200.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
3.
பல்நோக்கு பணியாளர்: 6 இடங்கள்.
வயது: 25க்குள்.
சம்பளம்: ரூ.18,000- ரூ.56,900.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தேர்ந்தெடுககப்படுவர்.
கட்டணம்: ரூ.500/-.
இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினர்/பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
https://clri.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.03.2026.
3
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-