News & Ad contact: 75025 54555
ரயில்வேயில் 22,195 பணியிடங்கள் : 10ம் வகுப்பு/ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு :
பணி: குரூப் சி லெவல்- 22,195 இடங்கள்.
காலியிடங்கள் ஏற்பட்டுள்ள துறைகள்: i) எலக்ட்ரிக்கல்: அசிஸ்டென்ட் டிஆர்டி, அசிஸ்டென்ட் ஆபரேஷன்ஸ், அசிஸ்டென்ட் டிஎல் மற்றும் ஏசி, அசிஸ்டென்ட் லோகோ ஷெட், அசிஸ்டென்ட் ஆபரேஷன்ஸ், ii) எஸ் அண்ட் டி: அசிஸ்டென்ட் iii) டிராபிக்: பாய்ன்ட்ஸ்மேன்- பி.
iv) இன்ஜினியரிங்: அசிஸ்டென்ட் டிராக் மிஷின், டிராக் மெயின்டெனர்-iv, அசிஸ்டென்ட் பிரிட்ஜ், அசிஸ்டென்ட் பி.வே.
v) மெக்கானிக்கல்: அசிஸ்டென்ட் கேரேஜ் மற்றும் வேகன் சம்பளம்: ரூ.18,000.
வயது: 1.1.2026 தேதியின்படி பொதுப்பிரிவினர்கள் 18 முதல் 33க்குள் இருக்க வேண்டும்.
எஸ்சி/எஸ்டி/ஒபிசியினருக்கு ரயில்வே விதிமுறைப்படி தளர்வு வழங்கப்படும்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்து அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் திறன் தேர்வு, மருத்துவ தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்துத் தேர்வில் கணிதம், ரீசனிங், பொது அறிவியல், ெபாது அறிவு ஆகிய பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
10ம் வகுப்பு தரத்தில் கேள்விகள் கேட்கப்படும்.
எழுத்துத் தேர்வுக்கான விரிவான பாடத்திட்டம், மதிப்பெண்கள் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுகிறவர்களுக்கு உடற்தகுதித் திறன் தேர்வு நடத்தப்படும்.
இதில் ஆண்கள் 35 கிலோ எடையை தூக்கிக் கொண்டு, 2 நிமிடங்களில் 100 மீட்டர் தூரத்தை ஒடிக் கடக்க வேண்டும்.
4 நிமிடங்கள், 15 வினாடிகளில் 1000 மீட்டர் தூரத்தை ஓடி முடிக்க வேண்டும்.
பெண்கள் 20 கிலோ எடையை தூக்கிக் கொண்டு 2 நிமிடங்களில் 100 மீட்டர் தூரத்தை ஓடி முடிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ளும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 2ம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும்.
கட்டணம்: எஸ்சி/எஸ்டி/பெண்கள்/முன்னாள் ராணுவத்தினர்/பெண்களுக்கு/திருநங்கைகளுக்கு ரூ.20/-.
இதர பிரிவினருக்கு ரூ.500/-.
இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.03.2026.
4
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-