News Image
கோவில்பட்டியைத் தொடும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் :

கன்னியாகுமரி - டெல்லிக்குப் பயணம் செய்வது மிகவும் எளிதான ஒன்றாகி விட்டது.

கன்னியாகுமரியிலிருந்து டெல்லிக்கு (ஹசரத் நிஜாமுதீன்) இயக்கப்படும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் இந்தியாவில் மிக நீண்ட தூரம் பயணிக்கும் ரயில்களில் ஒன்றாகும்.

சுமார் 2,919 கி.மீ தொலைவை 46 மணிநேரத்தில் கடக்கும் இந்த ரயில், வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் இயக்கப்படுகிறது.

கன்னியாகுமரியில் இரவு 08:30 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், கோவில்பட்டி இரவு 11:13 மணிக்கு வந்தடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திருக்குறள் எக்ஸ்பிரஸ் மதுரை, திருச்சி, சென்னை எழும்பூர், விஜயவாடா மற்றும் போபால் வழியாகப் பயணித்து, மூன்றாம் நாள் மாலை 06:35 மணிக்கு டெல்லியைச் சென்றடைகிறது.



3

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad