News & Ad contact: 75025 54555
தங்கம்: ₹ 14250
வெள்ளி: ₹ 275
தூத்துக்குடி எஸ்.பி., அலுவலகம் அருகே 5½ அடி நீள நல்லபாம்பு மீட்பு! :
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே 5½ அடி நீளமுள்ள நல்லபாம்பு மீட்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே நல்ல பாம்பு ஒன்று புகுந்து அச்சுறுத்திக் கொண்டிருந்தது.
இதனைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் பாம்பை மீட்டு செல்லுமாறு சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
செய்தி கிடைத்ததும் சிப்காட் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காவல் கண்காணிப்பாளர் அலுவலக முன் பகுதியில் பதுங்கி இருந்த 5½ அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
5
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-