News Image
சிலிண்டர் முன்பதிவு காலக்கெடுவை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு - மக்களுக்கு முக்கிய வேண்டுகோள் :

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் எழுந்துள்ள நிலையில், இந்திய இல்லத்தரசிகளின் கவலையைப் போக்கும் விதமாக மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்திற்குப் பிறகு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளர் சுஜாதா சர்மா சிலிண்டர் விநியோகம் குறித்துப் பொதுமக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஒரு சிலிண்டர் முன்பதிவு செய்த பிறகு அடுத்த சிலிண்டரை 25 நாட்கள் கழித்து முன்பதிவு செய்யும் வகையில் காலக்கெடு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இது 45 நாட்களாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையற்ற பதுக்கலைத் தவிர்க்கவும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சரிசமமாகச் சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் இறக்குமதி பாதிக்கப்படாமல் இருக்க, இந்தியாவில் எல்பிஜி உற்பத்தியைக் கணிசமாக (சுமார் 28% முதல் 40% வரை) மத்திய அரசு அதிகரித்துள்ளது.

பெட்ரோ கெமிக்கல் ஆலைகளிலிருந்து கிடைக்கும் எரிவாயுவைச் சமையல் எரிவாயுவாக மாற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதன் மூலம் தினசரி சுமார் 50 லட்சம் சிலிண்டர்கள் எவ்வித தடையுமின்றி விநியோகம் செய்யப்பட்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"நகரம் முதல் கிராமம் வரை சிலிண்டர் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

பொதுமக்கள் அச்சப்பட்டுத் தேவையில்லாமல் சிலிண்டர்களை முன்பதிவு செய்ய வேண்டாம்" எனச் செயலாளர் சுஜாதா சர்மா கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், எரிவாயுக் குழாய் வசதி உள்ள இடங்களில் மக்கள் அதற்கு மாற முன்வர வேண்டும் என்றும், இதன் மூலம் சிலிண்டர் மீதான அழுத்தம் குறையும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.



3

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad