News & Ad contact: 75025 54555
ஆறுமுகமங்கலம் ஶ்ரீ ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது :
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் சுவாமி ஶ்ரீ ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
24.04.2026 வெள்ளிக் கிழமை இரவு 07:00 மணியளவில் ஶ்ரீ ஆயிரத்தெண் விநாயகர் மூஷிக வாகன திருக்காட்சியும், ஶ்ரீ காளஹஸ்தீஸ்வரர், ஶ்ரீ கல்யாணசுந்தரி அம்பாள் ரிஷப வாகன திருக்காட்சியும் நடைபெறுகிறது.
26.04.2026 ஞாயிற்று கிழமை காலை 09:30 மணிக்கு மேல் 11:00 மணிக்குள் மிதுன லக்னத்தில் ஶ்ரீ பஞ்சமுக விநாயகர் உருகு சட்டசேவை நடைபெறுகிறது.
அன்று இரவு முதல் ஶ்ரீ பஞ்சமுக விநாயகருடன் ஶ்ரீ நடராஜர் ஏழாம் திருநாள் முதல் கால ருத்ர அம்ச சிவப்பு சாத்தி திருக்கோலத்திலும், இரண்டாம் கால பிரம்ம அம்ச வெள்ளை சாத்தி திருக்கோலத்திலும், மூன்றாம் கால விஷ்ணு அம்ச பச்சை சாத்தி திருக்கோலத்திலும் ஆறுமுகமங்கலம் மற்றும் கொட்டாரக்குறிச்சி கிராமத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறுகிறது.
3
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-