News Image
ஓட்டப்பிடாரம் தொகுதியில் நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் தீவிர பிரச்சாரம் :

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சி வேட்பாளராகக் களமிறங்கியுள்ள வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள குலையன்கரிசல், கூட்டம்புலி, மங்கலகிரி, புதுக்கோட்டை, மங்களகிரி, பேரூரணி, அல்லிக்குளம், கோரம்பள்ளம், தட்ட பாறை உட்பட 20 க்கும் மேற்பட்ட பகுதியில் வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவர் கூறுகையில், சாதி, மதம் வேறுபாட்டைக் களைந்து, அனைத்து மக்களும் சமம், பெண்களுக்குப் பாதுகாப்பு மற்றும் பெண் கல்வி என்பது உட்பட்ட சிறப்பான நடைமுறைகளை கொண்டு வர பாடுபடுவேன் என்று உறுதியளித்தார்.

அப்பகுதியில் உள்ள மக்கள் வக்கீல் அருணா தேவிக்கு உற்சாக வரவேற்பு அளித்து, மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைப்பதாக உறுதியளித்தனர்.



4

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad Ad