News & Ad contact: 75025 54555
தேர்தல் சோதனையில் ரூ. 2.36 கோடி ரொக்கம் பறிமுதல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.2.36 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விவரங்களை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் வெளியிட்டுள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதல் இன்று (22.04.2026) வரை நடத்தப்பட்ட தீவிரக் கண்காணிப்பில் கண்டறியப்பட்ட விவரங்கள் பின்வருமாறு: உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் ரூ.2,36,73,618 பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.38,42,187 பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு ரூ.8,12,900 மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த பறக்கும் படைகள் (Flying Squads) மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் இந்த அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணம் மற்றும் தேர்தல் விதிகளுக்குப் புறம்பாகக் கொண்டு செல்லப்பட்ட மதுபானங்கள் மற்றும் இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
"நேர்மையான மற்றும் பாதுகாப்பான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யக் கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பெருமளவிலான தொகையைக் கொண்டு செல்லும்போது உரிய ஆவணங்களை உடன் வைத்திருக்க வேண்டும்," என ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தியுள்ளார்.
நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மாவட்ட எல்லைகளிலும், முக்கிய சாலைகளிலும் கண்காணிப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தேர்தல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-