News Image
தூத்துக்குடி - மும்பை சிறப்பு ரயில் தாமதம்: இன்று இரவு 11.30 மணிக்கு புறப்படும் : தெற்கு ரயில்வே :

இணைப்பு ரயில் தாமதம் காரணமாக தூத்துக்குடி - மும்பை சிறப்பு ரயில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதிலாக இன்று இரவு 11.30 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ரயில்வே மண்டலம் சார்பில் தென்மாவட்ட பயணிகளின் வசதிக்காக மும்பையில் இருந்து பெங்களூரு, மதுரை வழியாக தூத்துக்குடிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

அதன்படி, சிறப்பு ரயில் (வ.எண்.01005) மும்பையில் இருந்து வருகிற 21-ஆம் தேதி முதல் வருகிற ஜூன் மாதம் 2-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்படுகிறது.

மறுநாள் காலை 7.55 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது.

நண்பகல் 11.30 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரயில் (வ.எண்.01006) தூத்துக்குடியில் இருந்து வருகிற 22-ஆம் தேதி முதல் வருகிற ஜூன் மாதம் 3-ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் மாலை 3.30 மணிக்கு புறப்படும் எனற அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இணைப்பு ரயில் தாமதம் காரணமாக தூத்துக்குடி - மும்பை சிறப்பு ரயில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதிலாக இன்று இரவு 11.30 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



2

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad